Viswasam is a 2019 Tamil Movie directed by SivaVaaney Vaaney song from this Ajith Kumar and Nayanthara starrer Viswasam is composed by the music director D. ImmanViveka has provided the Lyrics for this song: Vaaney Vaaney, while Hariharan and Shreya Ghoshal have provided the voice. Below in this article, you can find the details of Vaaney Vaaney Song Lyrics in Tamil language(s).

Song Details:

Movie: Viswasam
Song Title: Vaaney Vaaney
Movie Director : Siva
Music Director: D. Imman
Singer(s): Hariharan and Shreya Ghoshal
Lyrics By: Viveka
Language(s): Tamil

Vaaney Vaaney Video Song from Viswasam movie

Vaaney Vaaney Video Song from Viswasam is well received by the Audience. The Video Song has reached more than 27Million views since the song is uploaded on YouTube.

Lahari Music | T-Series is the original owner of this Video Song, hence copying this Video song in any form is considered as a Copy Right Violation as per YouTube, Indian and American Copy Right Laws.

Vaaney Vaaney Song Lyrics in Tamil

குழு: மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன கேத்துனா
கண்டே பத்நாமி சுபகேத்தவம்
ஜீவா சரதாம் சதம்
பெண்: வானே வானே வானே
நானுன் மேகம் தானே
பெண்: வானே வானே வானே
நானுன் மேகம் தானே
பெண்: என் அருகிலே
கண் அருகிலே
நீ வேண்டுமே
பெண்: மண் அடியிலும்
உன் அருகிலே
நான் வேண்டுமே
பெண்: சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
என்ன முடியாதஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே
ஆண்: நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
ஆண்: நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
பெண்: வானே வானே வானே
நானுன் மேகம் தானே
ஆண்: இனியவளே
உனது இரு விழி முன்
பழரச குவளையில்
விழுந்த எறும்பின் நிலை
எனது நிலை
விலக விருப்பம் இல்லையே பூவே
பெண்: அதிசயனே
பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று
உனது முகம்
தவிர எதுவும் இல்லையே அன்பே
ஆண்: வேறாரும் வாழாத
பெரு வாழ்விது
நினைத்தாலே மனம் எங்கும்
மழை தூவுது
பெண்: மழலையின் வாசம் போதுமே
தரையினில் வானம் மோதுமே
ஒரு கணமே உன்னை பிரிந்தால்
உயிர் மலர் காற்று போகுமே
ஆண்: நீதானே…
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆண்: பொஞ்சாதி
பெண்: ஹ்ம்ம் ம்ம்
ஆண்: நானே உன்
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆண்: சரிபாதி
ஆண்: நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
பெண்: வானே வானே வானே
நானுன் மேகம் தானே
ஆண்: என் அருகிலே
கண் அருகிலே
நீ வேண்டுமே
பெண்: மண் அடியிலும்
உன் அருகிலே
நான் வேண்டுமே
ஆண்: சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
பெண்: என்ன முடியாத ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே
ஆண்: நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
ஆண்: நீதானே
குழு: நீதானே
ஆண்: பொஞ்சாதி
குழு: பொஞ்சாதி
ஆண்: நானே உன்
குழு: நானே உன்
ஆண்: சரிபாதி
குழு: சரிபாதி
பெண்: வானே…